ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 31ம் தேதி தேர்த் திருவிழா!
மங்கலம்பேட்டை: காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் வைகாசி தேர் திருவிழா வரும் 31ம் தேதி நடக்கிறது. மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகாசி தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ÷ தர் பழுதடைந்ததால் தேர் திருவிழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் பொது மக்கள் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யும் பணி துவங்கியது. கடந்த மாதம் தேர் திருப்பணி முடிந்து வெள்ளோட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து இந்தாண்டு வைகாசி தேர் திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு 8:00 மணியளவில் அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. நேற்று (27ம் தேதி) காலை 7:00 மணிக்கு கருட சேவை நடந்தது. நாளை (29ம் தேதி) மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 31ம் தேதி காலை 6:00 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.