வைகாசி விசாக விழா!
ADDED :3916 days ago
பனைக்குளம்:அழகன்குளம் பாவடித்தெருவில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாகவிழா, கடந்த மே 23 ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலையில் விளக்குபூஜை நடந்தது. அபிஷேக ஆராதனைகளுக்கு பின், மூலவர் வெண்ணிற அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, தினமும் ஆன்மிக சமயச்சொற்பொழிவுகள் நடந்து வருகின்றன. அழகிய நாயகி மகளிர் மன்றத்தலைவி பிரேமா ரத்தினம் குழுவினரின் திருப்புகழ் பஜனை நடந்தது. ஏற்பாடுகளை டிரஸ்டி சிதம்பரநாதன், லோகநாதன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.