உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைராயன்பட்டினம் வேர்க்கொல்லை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

திருமலைராயன்பட்டினம் வேர்க்கொல்லை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

காரைக்கால்: திருமலைராயன்பட்டினத்தில் வேர்க்கொல்லை மாரியம்மன்,ஸ்ரீதேவி,பூதேவி சமேத கடல் அமர்த்து பெருமாள் திருக்கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
காரைக்கால் திருமலைராயன்பட்டினம் போலகம் பகுதியில் நேற்று வேர்க்கொல்லை மாரியம்மன் ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீ கடல் அமர்த்தும் பெருமாள் திருக்கோவில் புனராவர்த்தன நூதன ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேக நடந்தது.

கடந்த 27ம் தேதி கணபதி ஹோமம் நவகிரக ஹோமம்,மஹாலெஷ்மி ஹோமம்,வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம்.வெங்கடேசப் பெருமாள் ஆலய குளத்திலிருந்து யாகசாலைக்கு மங்கள இசையுடன் நீர் எடுத்துவருதல்.கும்பலங்காரம்,கடஸ்தாபனம் முதல் காலம் யாக பூஜைகளுடன் தொடங்கியது.நேற்று முன்தினம் இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் காலம் பூஜைகள் பூர்ணாஹீதி தீபாராதனை பிரசாதம் வழஙங்குதல்.நேற்று காலை கடம் புறப்படுதல் மற்றும் விமான மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சிவக்குமார் எம்.எல்.ஏ.,முன்னாள் கொம்யூன் பஞ்சாயத்து தலைவி கீதாஆனந்தன்.கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !