உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேர்திருவிழா கோலாகலம்!

தேர்திருவிழா கோலாகலம்!

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் கிராமத்தில், முத்து மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது.ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் கிராமத்தில், பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 24ம் தேதி, முத்து மாரியம்மன் ஸ்வாமிக்கு சக்தி அழைத்தலுடன் விழா துவங்கியது. 25ம் தேதி, நல்லதங்காள் ஸ்வாமிக்கு பொங்கல் வைத்து, ஸ்வாமி திருவீதி உலா வந்தது. 26ம் தேதி, நத்தமடையான் ஸ்வாமிக்கு பொங்கலும், 27ம் தேதி, முத்து மாரியம்மன் ஸ்வாமிக்கு பால் குடம் எடுத்து, ஊர்வலம் நடந்தது.

28ம் தேதி, அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், ஸ்வாமி ஊர்வலம் நடந்தது. நேற்று, மதியம் 3 மணியளவில், முத்து மாரியம்மன் ஸ்வாமி தேரை வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்துச் சென்றனர். விழாவில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !