திரவுபதி அம்மன் கோவில் திருவிழா!
ADDED :3788 days ago
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே மேலஉத்தமநல்லூரில் திரவுபதி அம்மன் கோவில், தீ மிதி விழாவை முன்னிட்டு, 26ம் தேதி வீரகொந்தம் புறப்பாடு, சக்தி கரகம், அக்னி சட்டி, பால்குடம் புறப்பாடு நடந்தது. மாலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து, வாணவேடிக்கையும், இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. முத்து பல்லக்கில், அம்மன் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து தர்மர் பட்டாபிஷேகமும், அம்மன் கரகம் எடுத்து, மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்து.