உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாமோத பெருமாள் ஸ்வாமி தேரோட்டம்

தாமோத பெருமாள் ஸ்வாமி தேரோட்டம்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, எர்ப்பட்டி, தாமோத பெருமாள் ஸ்வாமி கோவில், தேர் திருவிழா நடந்தது. கடந்த, 29ம் தேதி அனுமந்த கொடி ஏற்றுதல், மற்றும் கங்கணம் கட்டுதல் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, தாமோதர பெருமாள் ஸ்வாமி தேர்திருவிழா நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து, இழுத்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து, இரவு கலை நிகழ்ச்சி மற்றும் வான வேடிக்கை நடந்து. இன்று (ஜூன்1) அதிகாலை, 5 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும், மாலை, 4 மணிக்கு ஊர் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், இரவு கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை ஸ்வாமிக்கு சிறப்பு பூஜையும், கரகாட்டம் மற்றும் மயிலாட்டத்துடன் மாவிளக்கு எடுத்தலும், பூங்கரகம் எடுத்தலும் நடக்கிறது. 3ம் தேதி மஞ்சள் நீராட்டு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !