உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தி விநாயகர் கோவிலில் 4ம் தேதி கும்பாபிஷேகம்

சித்தி விநாயகர் கோவிலில் 4ம் தேதி கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி எஸ்.பி.முனுசாமி நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், வரும் 4ம் தேதி, கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கும்மிடிப்பூண்டி, எஸ்.பி.முனுசாமி நகரில் சித்தி விநாயகர், மரகதாம்பிகை சமேத வில்வநாதீஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவிலில், நாளை காலை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. நாளை மாலை, யாக சாலை பூஜை துவங்குகிறது. வரும் 4ம் தேதி காலை, 9:45 மணிக்கு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து சித்தி விநாயகர், மரகதாம்பிகை, வில்வநாதீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !