உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்பாடி கோவில் தேர் திருவிழா

கல்பாடி கோவில் தேர் திருவிழா

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, கல்பாடியில் அமைந்துள்ள அய்யனார், தொட்டியத்தான் கோவில் தேர் திருவிழா நடந்தது. தேர் திருவிழாவையொட்டி கடந்த, 15ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. 22ம் தேதி காப்பு கட்டுதலை தொடர்ந்து தினமும், பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தது. 29ம் தேதி மாவிளங்கு பூஜையும், வெட்டுக்குதிரையில்ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. தேரோட்டம், நேற்று காலை, 7 மணிக்கு நடந்தது. பெரம்பலூர் யூனியன் சேர்மன் ஜெயக்குமார் முன்னிலையில், எம்.பி., மருதராஜா வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்று, மாலை, 6 மணிக்கு நிலை நின்றது. இதில், கல்பாடி உட்பட சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். இன்று, (31ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழாவும், காப்பு அவிழ்ப்புடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !