மாரியம்மன் கோவில் தீமிதி விழா
ADDED :3781 days ago
புதுச்சேரி: அனிதா நகர் தேவி கருமாரியம்மன் கோவில் தீமிதி விழா விமர்சையாக நடந்தது. உழந்தைகீரப்பாளை யம் அனிதா நகர் தேவி கருமாரியம்மன் கோவில் பிரமோற்சவ தீமிதி விழா கடந்த 26 ம் தேதி துவங்கியது. தினம் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. 29ம் தேதி பார்சாகை வார்த்தல் நிகழ்ச்சி, 108 இளநீர் அபிஷேகம் நடந்தது. நேற்று காலை நவசக்கதி பூஜையுடன் தீமிதி விழா துவங்கியது. மாலை 6.30 மணிக்கு தீமிதி விழா நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா, 2ம் தேதி ஊஞ்சல் உற்சவம், மகாதீபாராதனை நடக்கிறது. 3ம் தேதி காத்தவரராயன் சுவாமிக்கு கும்ப படையலிடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.