உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணத்துக்கடவு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா!

கிணத்துக்கடவு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா!

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த நேற்று குண்டம் இறங்கினர். கிணத்துக்கடவு மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த மாதம், 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று காலை ஆற்றிலிருந்து கரகம் அழைத்துக் கொண்டு, குண்டம் இறங்கும் பக்தர்கள் ஊர்வலமாக ஆர்.எஸ்., ரோடு, திரு.வி.க., விவேகானந்தர் வீதி, பொள்ளாச்சி - கோவை ரோடு, மீண்டும் ஆர்.எஸ்., ரோடு வழியாக கோவிலை காலை, 8:00 மணிக்கு வந்தடைந்தனர். அங்கு, கோவில் முன் தயார் நிலையில் உள்ள குண்டத்தில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த குண்டம் இறங்கினர். முன்னதாக பத்ரகாளியம்மன் சிலைக்கு வெண்ணை சாத்தப்பட்டது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகல், 1:00 மணியளவில் அலகுபோடுதல் நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணிக்கு சக்திவிந்தையை ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடந்தன. இன்று, மஞ்சள் நீராடுதல், இரவு, 7:00 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் குண்டம் திருவிழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !