சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்!
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயில் வைகாசி விசாகத் திருவிழா தேரோட்டம் நடந்தது. மே 24ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.நேற்று 9 ம் நாள் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.காலை சுவாமி தேரில் எழுந்தருளினார். பூஜகர் சேதுராமலிங்கம்,மாதவன் தேரடி பூஜை செய்தனர். பக்தர்கள் பால்குடமெடுத்து கோயிலுக்கு வந்தனர். மூலவர்,பரிகார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம்,யாகசாலை பூஜை,தீபாரதனை நடந்தது. சிங்கம்புணரி கிராமத்தினர் முன்னாள் எம்.எல்.ஏ.,அருணகிரி தலைமையில் சந்திவீரன் கூடத்திலிருந்து மேள தாளம் முழங்க கோயிலுக்கு வந்து சாமிகும்பிட்டவுடன் மாலை 4 மணிக்கு பக்தர்கள் தேர்வடம் பிடித்தனர். விநாயகர்,பிடாரி அம்மன் சப்பரத்திலும் பூரணை புஷ்கலாதேவியர் சமேத சேவுகப்பெருமாள் ஐயனார் பெரியதேரிலும் உலா வந்தனர். 6 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. ரஜினிகாந்த் நற்பணி மன்ற 31 ம் ஆண்டு தண்ணீர் பந்தலை நடிகர் மயில்சாமி திறந்து வைத்தார். இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. இன்று பத்தாம் நாள் தீர்த்தத்திருவிழா,திருக்குடநீராட்டம்,இரவு சுவாமிபூப்பல்லக்கில் திருவீதி உலா,கலை இசை நிகழ்ச்சி நடக்கிறது.