தஞ்சாவூர் பன்னிரு கருட சேவை விழா: ஜூன் 7ல் துவக்கம்
ADDED :3781 days ago
தஞ்சாவூர்: ஹிந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜ தரிசன சபை ஆகியவை சார்பில் பன்னிரு கருட சேவை பெருவிழா நடந்தப்பட்டு வருகிறது. ஜூன், 7ம் தேதி மங்களாசாசனத்துடன் விழா துவங்குகிறது. 8ம் தேதி, நீலமேகர், மணிக்குன்னர், நரசிம்மர், கல்யாண வெங்கடேசர், கலியுக வெங்கடேசர், வரதராஜப் பெருமாள், நவநீதகிருஷ்ணன், மேலவாசல் ரெங்கநாதர், விஜயராமர், நவநீதகிருஷ்ணன், ஜனார்த்தன பெருமாள், பிரசன்ன வெடங்கடேசர் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலிருந்து, பன்னிரு கருட சேவை புறப்பாடும், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய இடங்களில் வீதி வலமும், ஜூன், 9ம் தேதி நவநீத சேவையும், 10ம் தேதி விடையாற்றியும் நடக்கிறது.