மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3780 days ago
முசிறி: முசிறி யூனியன், கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மகாசக்தி மாரியம்மன் மற்றும் விநாயகர், கருப்பண்ணசாமி, புரவாயி, முன்னடியான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நடந்த கும்பாபிஷேக விழாவையொட்டி, காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், அனுக்ஞை, மஹா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, வாஸ்து பலி, பூர்ணாஹுதி நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், கொல்லப்பட்டி, திருத்தியமலை, முசிறி மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.