உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 4ல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

4ல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

ஆர்.கே.பேட்டை: சொரக்காய்பேட்டையில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம், ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. பள்ளிப்பட்டு அடுத்த, சொரக்காய்பேட்டையில், பக்தர்களின் பங்களிப்புடன், ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது இறுதி கட்ட பணிகளாக, வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது. யாகசாலை பூஜைகள் நாளை துவங்குகிறது. ஜூன் 4ம் தேதி (நாளை மறுதினம்) காலை 9:00 மணிக்கு, கோவில் கோபுரத்திற்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !