உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி மரகதாம்பிகை சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் பிரதோஷ விழா நடந்தது. சிவபெருமான், நந்தி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நந்திக்கு அருகம்புல், மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் நடந்தது. மாலை, 5:45 மணிக்கு நந்திக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தாராட்சி லோகாம்பிகை உடனுறை பரதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் பிரதோஷ விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !