உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா

விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணியர் ஸ்வாமி கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற்றது. விராலிமலை, சுப்பிரமணியர் கோவிலில், வைகாசி விசாகத் திருவிழா கடந்த, 24ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பின்னர், கொடிமரத்துக்கு சிறப்பு யாகம் நடத்தி கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். விழாவையொட்டி தினமும், பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி வீதியுலா நடைபெற்றது. தேரோட்டம் நேற்று காலை, 9.45 மணிக்கு தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளினார். இலுப்பூர் ஆர்.டி.ஓ., வடிவேல்பிரபு, தாசில்தார் திருமலை, செயல்அலுவலர் கருணாகரன் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். திருத்தேர், விராலிமலையின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து, 11.35 மணிக்கு நிலையை அடைந்தது. விழாவை முன்னிட்டு, பல்வேறு அமைப்பினர் சார்பில் அன்னதானம், நீர் மோர், பானகம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !