தீவனூர் பெருமாள் கோவிலில் தேரோட்ட திருவிழா!
ADDED :3780 days ago
திண்டிவனம்: தீவனூர் பெருமாள் கோவிலில் நேற்று தேரோட்ட விழா நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூர் ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 25 ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 29ம் தேதி இரவு கருட÷ சவையும், 31ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 8:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்திருந்தார்.