உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேஷ வாகனத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் பவனி!

சேஷ வாகனத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் பவனி!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று, சேஷ வாகனத்தில், பரம பதநாதன் திருக்கோலத்தில், வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று, அதிகாலை 5:40 மணியள வில், பரமபதநாதன் திருக்கோலத்தில், வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவியரும் எழுந்தருளினர். மூவரும் கோவிலில் இருந்து புறப்பட்டு மாடவீதி, திருகச்சி நம்பி தெரு, விளக்கடி கோவில் தெரு, காமராஜர் சாலை, மேற்கு ராஜ வீதி வழியாக சென்று, கங்கைகொண்டான் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு நிவேதனம் நடை பெற்றது. அங்கிருந்து காலை 8:15 மணியளவில் புறப்பட்டு, செங்கழுநீர் ஓடை வீதி, கிழக்கு ராஜ வீதி, காந்தி சாலை வழியாக, காலை 11:30 மணியளவில், கோவிலை சென்றடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !