சுப்ரமணியர் கோவில்களில் வைகாசி விசாக சிறப்பு பூஜை!
ADDED :3779 days ago
கம்மாபுரம்: கம்மாபுரம், சி.கீரனூர் சுப்ரமணியர் கோவில்களில் வைகாசி விசாக சிறப்பு பூஜை நடந்தது. கம்மாபுரம், சி.கீரனூர் சுப்ரமணியர் ÷ காவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 11:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். மாலை 5:00 மணிக்கு சிறப்பு பூஜை, அன்னப்படையல் நடந்தது. அதே போல், சி.கீரனூர் வள்ளி தெய் வானை சமேத சுப்ரமணியர் கோவிலில், சிறப்பு அபிஷேக ஆராதனை, கந்தபுராணம் ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது.ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.