திருவாரூர் வல்லுடைய ஐயனார் கோவிலில் தெப்ப உற்சவம்!
ADDED :4142 days ago
திருவாரூர்: மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை வல்லுடைய ஐயனார் கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடந்தது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் வரலாற்று சிறப்பு மிக்க வல்லுடைய ஐயனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா மிகவும் விமர்சியாக நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த வாரம் துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வந்தது. நேற்று முன் தினம் இரவு 10.00 மணிக்கு நடந்த ஊஞ்சல் உற்சவத்தை தொடர்ந்து 11.00 மணிக்கு தெப்ப உற்சவம் அதிவிமர்சியாக நடந்தது. இதில் அப்பகுதியினர் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.