நிவேதன முறை!
ADDED :3835 days ago
சுருதிசொல் நிவேதனம் ஈசான வதனத்திற்
சுத்தானம் இனிய தாமால்
தூயதத் புருடவ தனத்திற்கு ளோதனம்
சொலும கோரத் தில்திலம்
தரைபுகழும் வாமதே வானனமதிற் சுவைகொள்
தயிரன நிவேத னமதாம்
சத்தியோ சாதத்தின் முற்கான முறைசெயின்
தருபயன் இராச்சி யந்தான்
உரைசெய்பா கிலையுதவின் மிக்கசுக மேநல்கும்
ஓங்கும்வெண் சங்க பூசைக்கு
ஓங்குபுண் ணியமுறும் குச்சிப்பு லன்பொடெம்
உறுப்பிடப் பயம றுமெனத்
திரிபுரை மனோன்மணி யெம்மனைக் குநீமுனம்
செப்புமறை நீதி யன்றோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.