வேணுகோபால சுவாமி கோவிலில் கருட சேவை உற்சவம்!
ADDED :4149 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத ÷ வணுகோபால சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி, சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். வெங்கட்டராம கிருஷ்ணன், விஜயரங்கன், சுந்தரமூர்த்தி, சுந்தர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.