உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்மாபுரம் கோவிலில் 10ம் தேதி தீமிதி விழா!

கம்மாபுரம் கோவிலில் 10ம் தேதி தீமிதி விழா!

கம்மாபுரம்: கம்மாபுரம் அங்காளம்மன் கோவில் தீமிதி உற்சவம் வரும் 10ம் தேதி  நடக்கிறது. தீமிதி உற்சவத்தையொட்டி, கடந்த 1ம் தேதி காப்பு  கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணிக்கு அங்காளம்மன் பிறப்பு  வளர்ப்பு கதைப்பாட்டு நிகழ்ச்சி, இரவு 10:00 மணிக்கு அங்காளம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 7ம் தேதி காலை 9:00 மணிக்கு அபிஷேக  ஆராதனை, இரவு 9:00 மணிக்கு குடல் பிடுங்கி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, அங்காளம்மன், பாவடைராயன், வீரப்பத்திரன், பெரிய நாயகிய ம்மன் சுவாமிகள் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனர். தீமிதி உற்சவத்தையொட்டி வரும் 10ம் தேதி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை,  மாலை 4:00 மணிக்கு தீ மிதி உற்சவம் நடக்கிறது. 11ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !