உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலை ரோட்டில் "சோலார் லைட்

சதுரகிரி மலை ரோட்டில் "சோலார் லைட்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பிலிருந்து சதுரகிரி மலை செல்லும் ரோட்டில் 5 கி.மீ., தூரத்திற்கு "சோலார் லைட் அமைக்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலையடிவாரமான தாணிப்பாறையில் பக்தர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை என தொடர்ந்து புகார் வந்தபடி இருந்தது. இப்பகுதி விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ளதால் விருதுநகர் கலக்டர் அப்பகுதிகளை ஆய்வு செய்து சில அடிப்படை வசதிகளை செய்ய பரிந்துரைத்தார். அதன்படி கலக்டரின் உட்கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் செலவில் மேல்நிலை நீர்தொட்டி, நவீன கழிப்பறைகள், தாணிப்பாறை வண்டிப்பண்ணையின் நடுவே "ஹைமாஸ் லைட், ரோட்டின் இருபுறமும் "சோலார் லைட் ஆகியவை அமைக்கும் பணிகளும், நடந்தன. இதில் வத்திராயிருப்பு விலக்கில் இருந்து அடிவாரமான தாணிப்பாறை வரை முக்கிய சந்திப்புகள், பஸ் நிறுத்தங்கள் ஆகியவற்றில் சோலார் லைட் அமைக்கும் பணி முடிவடைந்து உடனடியாக பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பராமன் துவக்கி வைத்தார். இந்நிலையில் "ஹைமாஸ் லைட் அமைக்கும் இடம் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு மலையின் நுழைவுவாயில் அருகே அமைக்க முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !