உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா!

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா!

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், 300 ஆண்டுகளுக்கு பின், தெப்பத்திருவிழா, குளத்தில் இன்று நடக்கிறது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களில் வைகாசி விசாகத்தேர்த்திருவிழா நடந்து வருகிறது. 1ல் விஸ்வேஸ்வரர் தேரோட்டம், 2ல் ஸ்ரீவீரராகவப் பெருமாள் தேரோட்டம் நடந்தது. 10ம் நாள் திருவிழாவாக, சுவாமி குளத்தில் எழுந்தருளும் தெப்பத்திருவிழா இன்று நடத்தப்படுகிறது. பழங்காலத்தில், தற்போது பூ மார்க்கெட்டாக உள்ள பகுதியில், தெப்பக்குளம் இருந்தது. வணிக வளாகமாக மாறியதால், 10ம் நாள் திருவிழா, கோவிலில் பெரிய தட்டில் நீர் நிரப்பி, தெப்பத்திருவிழா நடத்தப்பட்டு வந்தது. 300 ஆண்டுக்கும் மேலாக, இரண்டு கோவில்களிலும் இந்நடைமுறையே பின்பற்றப்பட்டது.பெருமாள் கோவிலில், திருப்பணி செய்தபோது, புதிதாக தெப்பக்குளம் அமைக்கப்பட்டது. 300 ஆண்டுக்கு பிறகு, நடப்பாண்டு அங்கு தெப்பத்திருவிழா இன்று நடக்கிறது; மாலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !