வீரமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கோவை : வெள்ளலுார் கஞ்சிக்கோனாம்பாளையத்தில் உள்ள வீரமாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கும்பாபிஷேக விழா நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி, நவக்கிரஹ, சுதர்ஸன, மகாலட்சுமி ஹோமங்களுடன் துவங்கியது. பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு தீர்த்தக்குடங்கள் அழைத்து வரப்பட்டன. மாலை 6:00 மணியளவில் முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கின. இரவு 10:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்வு நடந்தது.இன்று காலை 5:30 மணிக்கு இரண்டாம் கால பூஜைகள் நடக்க உள்ளன. காலை 7:30 மணிக்கு மஹா தீபாராதனை நடக்கிறது. காலை 8:00 முதல் 9:00 மணிக்குள் கடக லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் நடக்கின்றன. இதையடுத்து, காலை 10:00 மணிககு தசதானமும், தசதரிசனமும் நடக்க உள்ளது.