உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி வசந்தோற்சவ விழா

வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி வசந்தோற்சவ விழா

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றில் எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயில், வைகாசி வசந்தோற்சவ விழா ஜூன் 1 ல் துவங்கியது. இதையொட்டி, கும்பத்திருமஞ்சனம் நடந்தது. மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வரதராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லக்கில் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.காலை 11 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, மதியம் அனுமார் கோயிலை அடைந்தார். தொடர்ந்து பெரியகடை பஜார் வழியாக, வைகை ஆற்றில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி, நயினார்கோவில் ரோடு வழியாக இரவு வண்டியூரை அடைந்தார். நேற்று முன்தினம் இரவு சேஷ வாகனத்தில் அலங்காரமாகி, மாணிக்கா மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு காட்சியளித்தார். ஜூன் 7 ல் காலை 9 மணிக்கு கோயிலை அடைகிறார். அன்றிரவு கண்ணாடிசேவை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !