உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

வீரமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

குறிச்சி : கோவை, கஞ்சிக்கோனாம்பாளையம் வீரமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. வெள்ளலுார் அருகே, கஞ்சிக்கோனாம்பாளையத்திலுள்ள கோவிலில், கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் காலை, கணபதி மற்றும் நவக்கிரக ஹோமங்களுடன் துவங்கின. தொடர்ந்து, மகாதீபாராதனை, கோபுர கலச ஸ்தாபனம், பிராயசித்த அபிஷேகம், தீர்த்தக்குடங்கள் அழைத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடந்தன.நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு பிம்பசுத்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் துவக்கம், நாடி சந்தானம், பூர்ணாஹுதி மற்றும் மகாதீபாராதனை நடந்தன. இதையடுத்து, மகா கும்பிஷேகம், சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது. மேலும், தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம், சயனாதிவாசமும், மதியம் அன்னதானமும் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !