உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டி முனீஸ்வரன் கோயில் விழாவில் சேறுபூசிய பக்தர்கள்!

பாண்டி முனீஸ்வரன் கோயில் விழாவில் சேறுபூசிய பக்தர்கள்!

தாண்டிக்குடி:தாண்டிக்குடி பாண்டி முனீஸ்வரன் கோயில் விழாவில் பக்தர்கள் சேறு பூசி நகர் வலம் வந்தனர்.மூன்று நாள் விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, முளைப்பாரி, பொங்கல் இடுதல், கிடா பலியிடுதல் நடந்தது. தொடர்ந்து ஆபரண பெட்டி சகிதமாக சேறு பூசி பக்தர்கள் நடனமாடி நகர் வலம் வந்தனர். மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர். மலைப்பகுதியில் உடலில் சேறு பூசும் நேர்த்திக்கடன் பிரசித்தப் பெற்றதாகும். சேறு பூசுவதால் தோல் நோய் நீங்குவதாக ஐதீகம் உள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !