குன்றத்துார் முருகன் கோவிலுக்கு புது சிக்கல்!
குன்றத்துார்: குன்றத்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலின், வளாகத்தை சுற்றி குவிந்து கிடக்கும் குப்பை, பிளாஸ்டிக் கழிவு களால், பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். திருக்கோவில்கள் சூழ்ந்த நகரம் என்று கூறப்படும், குன்றத்துாரில் மலையின் மேற்பகுதியில், சுப்ரமணிய சுவாமி ÷ காவில் உள்ளது; இக்கோவில் அடிவாரத்தில், 16 கால் மண்டபமும், அதை தொடர்ந்து, மலைக்கு செல்வதற்காக, 84 படிக்கெட்டுகளும் உள்ளன. ÷ காவிலின் பின் அடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னர் காலத்தில், இக்கோவில் நிறுவப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 800 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தலம் சிறப்புடன் விளங்கியதாகவும் கூறப்படுகிறது. எனினும், இக்÷ காவிலில், ஒரே ஒரு கல்வெட்டு மட்டும் உள்ளது. அதன்மூலம், இவ்வாலயம் கி.பி., 1720ம் ஆண்டு, மதுரை நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பிளாஸ்டிக் மயம்: இந்தளவு சிறப்புமிக்க இக்கோவிலுக்கு, பல மாவட்டங்களில் இருந்து, தினசரி ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். 2007ல் திருப்பணிகள் முடிந்து, குடமுழுக்கு நடைபெற்றது. சமீபகாலமாக, இக்கோவிலை சுற்றி பராமரிப்பு படுமோசமாக உள்ளது. நுழைவாயிலில் எங்கு பார்த்தாலும், ஒரே பிளாஸ்டிக் மயமாகவே உள்ளது. மற்றொரு புறம், பக்தர்கள் சாப்பிடும் இலை, உணவு பொருட்கள், குப்பை ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. அந்த இடத்தில் கால்நடைகள் கூட்டமாக நின்று, இலைகளையும், உணவு பொருட்களையும் தின்கின்றன. மற்றொருபுறம், பக்தர்களின் காணிக்கை முடி, கழிப்பறையின் பி ன்புறத்தில் குவியலாக கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. கோவிலின் பின்புறத்தை, அருகே வசிக்கும் மக்கள், கழிப்பறையாக பயன்படுத்தி வரு கின்றனர். கோவிலை சுற்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, அதன் பராமரிப்பும் மோசமாக உள்ளது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
என்ன செய்வது?: கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: பக்தர்கள் அர்ச்சனை பொருட்கள் மற்றும் உணவுகளை, பிளாஸ்டிக் பையில் கொண்டுவந்து, அவற்றை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று கூறினாலும், பக்தர்கள் அதை கண்டுகொள்வதே இல்லை. காணிக்கை முடியில், சிறியதாக இருப்பவற்றை அங்கேயே போட்டு விடுகின்றனர். வாரத்திற்கு ஒ ருமுறை, கோவிலை சுற்றி சுத்தம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.