உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க சப்பரத்தில் காஞ்சி வரதர் பவனி!

தங்க சப்பரத்தில் காஞ்சி வரதர் பவனி!

காஞ்சிபுரம்: வைகாசி பிரம்மோற்சவத்தில் நேற்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், வேணுகோபாலன் திருக்கோலத்தில், தங்க சப்பரத்தில் பவனி  வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான, நேற்று அதிகாலை  4:30 மணியளவில், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தங்க சப்பரத்தில், வேணுகோபாலன் திருக்கோலத்தில், எழுந்தருளினார். கோவிலில் இ ருந்து புறப்பட்டு, மாட வீதி, திருக்கச்சி நம்பி தெரு, விளக்கடி கோவில் தெரு, காமராஜர் சாலை வழியாக, பெரிய காஞ்சிபுரம் கங்கைகொண்டான்  மண்டபத்தில், காலை 7:30 மணியளவில், எழுந்தருளினார். அங்கு பிரசாத வினியோகம் நடைபெற்ற பிறகு, 8:00 மணியளவில், அங்கிருந்து புறப் பட்டு, கிழக்கு ராஜ வீதி, காந்தி சாலை வழியாக, காலை 11:30 மணியளவில், கோவிலை சென்றடைந்தார். வாகன மண்டபத்தில் இறங்கிய வரதராஜ  பெருமாள், அங்கிருந்து தேவியர்களுடன் நான்கு கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. அதன்பின் கண்ணாடி  அறைக்கு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !