மகா கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா!
ADDED :3779 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மகாகணபதி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி கிராமசாவடி தெருவில் விநாயகர் கோவில், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை மகாகணபதி, மகாலஷ்மி, நவநாயகர் தெய்வங்களுக்கு யாகம் செய்தனர். மாலையில் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாவஜனம், வாஸ்துசாந்தி, அங்குரார்பணம் ஆகிய வழிபாடுகள் நடத்தி, கும்ப கலசங்களில் விநாயகர் ஆவாகணம் செய்தனர். நேற்று காலை யாத்திரா தானத்திற்கு பின், கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந் தது. தொடர்ந்து மூலவர் விநாயகருக்கும் கும்பாபிஷேகம் நடத்தினர். சிவனடியார்கள் வேதசிவாகம முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தினர். நகர மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், கவுன்சிலர் சுகன்யாமோகன் உள்ளிட்ட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.