மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்தர் குரு பூைஜ!
ADDED :3778 days ago
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், திருஞானசம்பந்தர் குருபூஜை நடைபெற்றது. திருஞானசம்பந்தர், சிவஜோதியில் கலந்த தினமான வைகாசி மூலத்தன்று, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், இரவு 7:30 மணிக்கு, புஷ்ப பல்லக்கில் திருஞானசம்பந்தர் திருவீதி உலாவும், இரவு 8:45 மணிக்கு, ஞானசம்பந்தர் திருக்கல்யாணமும் நடைபெற்றன. தொடர்ந்து, இரவு 9:30 மணிக்கு, சிவஜோதியில், திருஞானசம்பந்தர் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடந்தது.