லவபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மாற்றம்!
கோயம்பேடு: கோயம்பேடு, லவபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத் தேதி, திடீரென மாற்றப்பட்டதால், நேற்று கோவிலுக்கு வந்த, ஏராளமான பக்தர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோயம்பேட்டில், குறுங்காலீசுவரர் கோவிலின் உபகோயிலான, லவபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று, நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திடீரென கும்பாபிஷேகம், வரும், 7ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதனால், கோவிலுக்கு நேற்று வந்த ஏராளமான பக்தர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோவில் ஊழியர் ஒருவர் கூறுகையில், இன்றைய நாளை விட, வரும், 7ம் தேதி, நட்சத்திரம் நன்றாக உள்ளது. அதுமட்டுமின்றி, மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவால், தேதி மாற்றப்பட்டது என்றார். இந்த நிலையில், வரும், 7ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, பத்தாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெறும். காலை, 9:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடைபெறும். மாலை, 4:00 மணிக்கு, சவுந்திராம்பிகை உடனாகிய லவபுரீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து, மங்கள வாத்தியம், விசேஷ வாணவேடிக்கை மற்றும் கோசை நகரானின் சிவ பூதகணங்களுடன் மாட வீதியில் அருள் வழங்குதல் ஆகியவை நடைபெறும்.