உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சர்வதீர்த்த குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்!

சர்வதீர்த்த குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளத்தில், மீன்கள் இறந்து மிதப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.ஆக்கிரமிப்புகாஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது, சர்வதீர்த்த குளம். இந்த குளம், 2011ம் ஆண்டு, அண்ணா நூற்றாண்டு விழாவின் போது, 43.90 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரைமைக்கப்பட்டது.அப்போது, குளத்தை சுற்றி அலங்கார மின் விளக்குகள், பூச்செடிகள், நடப்பதற்கு நடைபாதை, நான்கு புறத்திலும் பகுதி வாசிகள் அமர்வதற்கு கருங் கல்லாலான இருக்கைகள் அமைக்கப்பட்டன.தற்போது, அவை சமூக விரோதிகளால் அழிக்கப்பட்டுவிட்டன. இரவில் ஒரு சில மின்விளக்குகள் மட்டும் எரிகின்றன.இந்த குளத்திற்கு நீர்வரத்து கால்வாய் பல இடங்களில் தூர்ந்தும், ஆக்கிரமிப்பால் இருந்த இடம் தெரியாமலும் போய்விட்டது. இதனால் இந்த குளத்திற்கு, மழைநீர் வர வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், தற்போது தண்ணீர் அளவு குறைந்து விட்டதால், வெயிலின் தாக்கத்திற்கு குளத்தில் உள்ள மீன்கள் இறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.துர்நாற்றம்இரு நாட்களாக மீன்கள் இறந்து வருகிறது; நேற்று, அதிகளவில் மீன்கள் இறந்து மிதந்ததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுயது.இதுகுறித்து, கோவில் நிர்வாக அலுவலர் ஒருவர் கூறுகையில், தண்ணீர் அளவு குறைந்து விட்டதால், வெயில் தாங்க முடியாமல் மீன்கள் இறந்து வருகிறன்றன; இறந்த மீன்களை, அகற்றி குளத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !