ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் மகாகும்பாபிஷேகம்!
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நவ திருப்பதிகளில் முதல் திருப்பதி கோயிலான கள்ளபிரான் கோயில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
நவ திருப்பதி கோயில்களில் முதல் திருப்பதி கோயிலான கள்ளபிரான் கோயில் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு 1996 ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்பு நேற்று மகாகும்பாபிஷேகம் நடந்தது.
ஜூன் 4 ம் தேதி அனுஞ்கை, வாஸ்து பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து பூஜைகள் நடந்து வந்தது. நேற்று காலை 6.20 க்கு விஸ்ரூபம்,யாகசாலை பூஜை, ஹோமங்களில் பூர்ணாகுதி, யாத்தராதானம் நடந்தது. 6.30 மணிக்கு மேள தாளங்களுடன் புனித நீர் விமான கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. 6.40 மணிக்கு பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷங்கள் எழுப்ப கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கருட சேவை நிகழ்ச்சி நடந்தது.