உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்திப்பட்டி திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

ஆத்திப்பட்டி திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

அவலூர்பேட்டை: ஆத்திப்பட்டில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா   நடந்தது. மேல்மலையனுõர் ஒன்றியம், ஆத்திப்பட்டு   கிராமத்தில் திரவுபதி அம்மன்    கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி மாலையில் விக்கேனஸ்வர   பூஜை, கணபதி ஹோமமும்,   அனுக்ஞை, பூரணாஹூதி மற்றும் கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசமும் நடந்தன. நேற்று  காலை 6:00 மணிக்கு   கோபூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, மூலிகை திரவிய ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து 9: 45 மணிக்கு  திண்டிவனம்  நாகராஜ அய்யர், நகர்   இளம் சுடர் சீனிவாச சுவாமிகள், சங்கர் அய்யர் ஆகியோர் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு   அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !