உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 10ல் கும்பாபிஷேகம்

சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 10ல் கும்பாபிஷேகம்

உடுமலை : உடுமலை பூளவாடி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. உடுமலை அருகே பூளவாடி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது; மாலை 6.00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி பூஜை நடக்கிறது. வரும் 10ம் தேதி காலை 6.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை 9.00 மணிக்கு பூர்ணாகுதி, காலை 9.30 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம்; காலை 9.45 மணிக்கு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10.00 மணிக்கு மகாபிஷேகம், காலை 10.30க்கு அன்னதானம், மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8.00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !