பிரசண்ட விநாயகர் கோவிலில் கோ பூஜை
ADDED :5308 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் பிரசண்ட விநாயகர் கோவிலில் இன்று கோ பூஜை நடக்கிறது. பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் பிரசண்ட விநாயகர் கோவிலின் மூன்றாம் ஆண்டு விழா நடக்கிறது. இதையொட்டி, காலை 5.00 மணிக்கு கணபதி ஹோமமும், 6.30 மணிக்கு அபிஷேக பூஜையும், காலை 9.30 மணிக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது. காலை 10.00 மணிக்கு கோமாதா பூஜையும், பகல் 1.00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. விழாவில், மாலை 4.00 மணிக்கு விளக்கு பூஜை நடக்கிறது. கோமாதா பூஜையில் பங்கேற்க விரும்புபவர்கள் மாடும், கன்றும் அழைத்து வர வேண்டும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயசெல்வம் உட்பட பலர் செய்கின்றனர்.