உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை கண்டதேவி கோயிலில் கொடியேற்றம்!

தேவகோட்டை கண்டதேவி கோயிலில் கொடியேற்றம்!

தேவகோட்டை: கண்டதேவி குங்கும காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றம்,காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. அம்மனுக்கும், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தேவஸ்தான கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் அலுவலர்கள், மற்றும் கிராமத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.கடந்தாண்டு இரண்டு சமூகத்தினரிடையே சாமியை தூக்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், இந்து அறநிலையத்துறையினர், வருவாய்த்துறையினர் சமரசம் பேசியும் பலனில்லாததால் தேவஸ்தான ஊழியர்களே சாமியை தூக்கினர். இந்தாண்டு இரண்டு சமூகத்தினரிடம் கிராமத்தினரே பேசி சமாதானம் ஆன நிலையில், இந்தாண்டு வழக்கம் போல் கிராமத்தினரே சாமி தூக்கி திருவிழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !