செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3875 days ago
திண்டிவனம்: பந்தாடு கிராமத்தில் உள்ள செல்வகணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. திண்டிவனம் மரக்காணம் ரோட்டில் முருக்கேரி அடுத்த பந்தாடு கிராமத்தில் உள்ள செல்வகணபதி மற்றும் கோதண்டராம சுவாமி சன்னதிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 6ம் தேதி காலை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. மறு நாள் 7ம் தேதி காலை இரண் டாம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து, 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பூஜை களை முருக்கேரி சீனிவாச சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்தனர்.