ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம்!
ADDED :3770 days ago
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் 17ம் ஆண்டு சாகை வார்த்தல் நடந்தது. கடலூர் அடுத்த சி.என்.பாளையம் பட்டீஸ்வரம் வடக்கு தெருவில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 17ம் ஆண்டு சாகை வார்த்தல் கடந்த 9ம் தேதி செவ்வாய்கிழமை நடந்தது. அதனையொட்டி அன்று காலை 9:00 மணிக்கு விநாயகர், அம்மன் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பகல் 2:00 மணிக்கு கெடிலம் ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து வந்து சாகை வார்த்தல் நடந்தது. இரவு 10:00 மணிக்கு விநாயகர், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.