திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் நந்தவனம்!
ADDED :3872 days ago
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிச்சுற்று பிரகாரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நந்தவனத்தில் துளசி, செம்பருத்தி, சம்பங்கி, நந்தியாவட்டை, செண்பகம், மல்லிகை, மருகு, மரிக்கொழுந்து, மாசி பச்சை உள்ளிட்ட பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.மா, பலா வாழை மற்றும் அரிய வகை மரங்களான கடம்பம், வில்வம் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. இவற்றுக்கு, ஸ்பிரிங்லர் முறையில் தினமும் நீர் பாய்ச்சப்படுகிறது. வெளிபிரகாரத்தில், 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்கன்று நடவும் திட்டமிட்டுள்ளதாக, திருப்பணி குழுவினர் கூறினர்.