உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொள்ளாபுரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கொள்ளாபுரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஆர்.கே.பேட்டை: செல்வ விநாயகர் மற்றும் கிராம தேவதை கொள்ளாபுரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று (ஜூன் 11) நடைபெற உள்ளது. மாலையில் உற்சவ மூர்த்திகள் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, எக்னாபுரம் கிராமத்தில் உள்ள, செல்வ விநாயகர் கோவில் மற்றும் கிராம தேவதை கொள்ளாபுரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள், நேற்று முன்தினம் துவங்கின. நேற்று இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று, காலை 7:00 மணிக்கு, நான்காம் கால பூஜையும், 11:00 மணிக்கு, கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. மாலை 6:00 மணிக்கு, உற்சவ மூர்த்திகள் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !