உறையூர் வெக்காளியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :3769 days ago
திருச்சி:உறையூர் வெக்காளியம்மன் கோவில் உண்டியல், நேற்று திறந்து எண்ணப்பட்டது. அதில், 14 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்தது.திருச்சி, உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் உள்ள உண்டியல்கள், நேற்று கோவில் உதவி கமிஷனர் ஜெயப்பிரியா, மண்ணச்சநல்லூர் ஹிந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் சேதுராமன் ஆகியோர் தலைமையில் திறந்து எண்ணப்பட்டது.உண்டியலில், 14 லட்சத்து, 11 ஆயிரத்து, 473 ரூபாய் ரொக்கமும், தங்கம், 112 கிராமும், வெள்ளி, 256 கிராமும் இருந்தது. 43 வெளிநாட்டு கரன்ஸிகள் இருந்தது.