உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரளையூர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை!

பேரளையூர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை!

விருத்தாசலம்: பேரளையூர் பெருமாள் கோவிலில் மண்டல அபிஷேக நிறைவையொட்டி, 108 விளக்கு பூஜை நடந்தது.

விருத்தாசலம் அடுத்த பேரளையூர் வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த மாதம் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மண்டலாபிஷேக நிறைவு விழா, நேற்று முன்தினம் துவங்கியது.அன்று மாலை 4:00 மணிக்கு வரதராஜ பெருமாள், உற்சவ மூர்த்திக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை6:00 மணிக்கு சீதையின் பெருமை என்ற தலைப்பில் உபன்யாசம், இரவு 7:30 மணிக்கு 108 சுமங்கலிபெண்கள்இணைந்து திருவிளக்கு பூஜை செய்தனர். 8:00 மணிக்கு திருவாராதனம், சாற்றுமுறை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !