ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!
ADDED :3961 days ago
ராமேஸ்வரம்:ஆனி அமாவாசையை யொட்டி, ராமேஸ்வரத்திற்கு நேற்று வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள், அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி, புரோகிதர்கள் மூலம் திதி பூஜை செய்து, கடலில் புனித நீராடினர்.
பின்னர், ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடிவிட்டு, சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்று தரிசித்தனர்.