உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தச்சனேந்தல் கோயிலில் மகா ஹோமம்!

தச்சனேந்தல் கோயிலில் மகா ஹோமம்!

திருப்புவனம்: திருப்புவனம் அருகேயுள்ள தச்சனேந்தல் பொய்சொல்லா மெய் அய்யனார்
கோயிலில் மகா ஹோமம் நடந்தது.சுற்று வட்டார கிராம காவல் தெய்வமான இக்கோயில்
கலசங்கள் திருடு போனது. புதிய கலசங்கள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதனையொட்டி பொய்சொல்லா மெய் அய்யனார்,கருப்பண்ண சுவாமி, இருளாயி அம்மன், இதற்கு சேகரமான 21 தெய்வங்கள் அடங்கிய திருக்கோயில் அறக்கட்டளை சார்பாக ஹோமம் தொடங்கியது. மதுரை தண்டாயுதபாணி திருக்கோயில் பரமேஸ்வர பட்டர் ஹோமத்தை
தொடங்கி வைத்தார்.சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. ஹோம பூஜைக்கான ஏற்பாடுகளை
கருப்புச்சாமி, முத்துராமன், பிச்சை வகையறாவைச் சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !