உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோவை: கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவிலில் இந்தாண்டு சித்திரை விழா கடந்த 13ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது முதல் நிகழ்வாக கணபதி ஹோமம் நடந்தது தொடர்ந்து கொடியேற்றம் பூச்சாட்டு அக்னி சாட்டு திருவிளக்கு வழிபாடு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகியன நடைபெற்றது இதனை தொடர்ந்து வரும் 23ம் தேதி மகா அபிஷேகம் நடைபெறுகிறது அடுத்ததாக தமிழில் லட்சார்ச்சனை நடைபெறும் நிறைவாக வரும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சங்காபிஷேகம் நடைபெறும் நிறைவாக வசந்த உற்சவத்துடன் விழா நிறைவுபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது தினமும் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் அனைவரும் கோவில் வளாகம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டுள்ள அக்னி கம்பத்திற்கு மஞ்சள் வேப்பிலை தண்ணீர் ஊற்றுகின்றனர் இந்த விழாவை முன்னிட்டு கோவை பொள்ளாச்சி உடுமலை அன்னூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !