உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் துவக்கம்: ஏப்.,30 ல் தேரோட்டம்

திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் துவக்கம்: ஏப்.,30 ல் தேரோட்டம்

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.


ஏப்.30 ல் தேரோட்டம் நடைபெறும். சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சித்திரை பிரமோத்ஸவம் 12 நாட்கள் நடைபெறும்.நேற்று காலை 8:30 மணி அளவில் சுவாமி ஸ்ரீதேவி,பூதேவியருடன் கல்மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து சக்கரத்தாழ்வார், கொடிப்படம் திருவீதி உலா நடந்தது. பி்ன்னர் கொடி மரத்திற்கும்,சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து கொடிமரத்திற்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 11:00 மணி அளவில் பட்டாச்சார்யர்களால் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி பள்ளியறை எழுந்தருளினார். மாலையில் சுவாமிக்கும், ஆச்சார்யருக்கும் காப்புக்கட்டி உத்ஸவம் துவங்கியது. இரவில் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவீதி வலம் வந்தார். தினசரி காலை 8:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு7:00 மணிக்கு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும்.ஏப்.,30ல் தேரோட்டமும்,மே1ல் காலையி்ல பிரணயகலம், இரவில் புஷ்பயாகம் வாசித்தலும், மே 2 இரவில் புஷ்பபல்லக்கில் சுவாமி திருவீதிஉலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !